தமிழ்நாடு

40 ஆண்டு பழமையான மரம் வேரோடு பிடுங்கி இடமாற்றம்- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-06-29 08:56 GMT   |   Update On 2023-06-29 08:56 GMT
  • அடையாறு, காந்தி நகர், 4-வது மெயின் ரோட்டில் 40 ஆண்டுகள் பழமையான மரம் இருந்தது.
  • அடையாறில் இந்த மரம் குடியிருப்பு அருகே இருந்ததால் வீட்டின் மீது விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர்.

சென்னை:

அடையாறு, காந்தி நகர், 4-வது மெயின் ரோட்டில் 40 ஆண்டுகள் பழமையான மரம் இருந்தது. குடியிருப்பு அருகே இருந்த இந்த மரம் சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் இந்த மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டு அதன் கீழ்ப்பகுதி தனியாக வேர் பாதிக்கப்படாமல் பிடுங்கப்பட்டது. பின்னர் அந்த மரத்தை கிரேனின் உதவியுடன் கோட்டூர்புரத்தில் மியாவாக்கி காடுகளுக்காக மரங்கள் பராமரிக்கப்படும் இடத்தில் நடப்பட்டது. புதிதாக நட்ட மரத்தின் வளர்ச்சியை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிஅதிகாரி ஒருவர் கூறும்போது, அடையாறில் இந்த மரம் குடியிருப்பு அருகே இருந்ததால் வீட்டின் மீது விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். எனவே மரத்தை அகற்ற, குடியிருப்போர் நல சங்கத்தினர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.

எனவே மரத்தை வேராடு பிடுங்கி கோட்டூர்புரத்தில் இடத்தை தேர்வு செய்து வைத்தோம். இதில் மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 20 பேர் ஈடுபட்டனர். மரத்தின் வேர்களின் மையப் பகுதி சேதமடையாமல் பெரிய குழி தோண்டி கிரேனின் உதவியுடன் முழுவதும் எடுக்கப்பட்டது என்றார்.

Tags:    

Similar News