தமிழ்நாடு

தமிழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்கள்- முதல் நாளில் 18,763 பேர் விண்ணப்பம்

Published On 2022-06-21 06:03 GMT   |   Update On 2022-06-21 06:03 GMT
  • கல்லூரிகள் தொடங்கியுள்ள புதிய பாடப்பிரிவுகளால் 13 ஆயிரத்து 331 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 110 சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை:

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதையடுத்து என்ஜினீயரிங் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு http://www.tneaonline.org என்ற இணைய தள முகவரியில் நேற்றே தொடங்கியது.

மாணவர்கள் தாங்களாகவும், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் என்ஜினீயரிங் மற்றும் பி.டெக் படிப்புகளுககு விண்ணப்பித்தனர். பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 110 சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலமும் மாணவர்கள் விண்ணபித்தனர்.

முதல் நாளான நேற்று மட்டும் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு 18 ஆயிரத்து 763 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இவர்களில் 4,199 மாணவர்கள் கவுன்சிலிங்குக்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர். 790 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளதாக என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்கள் கிடைக்கும். கடந்த ஆண்டை விட 9,196 இடங்கள் அதிகமாக கிடைக்கும். கல்லூரிகள் தொடங்கியுள்ள புதிய பாடப்பிரிவுகளால் 13 ஆயிரத்து 331 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சில பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதால் 1,316 இடங்கள் இழந்துள்ளன. 8 கல்லூரிகள் கவுன்லிங்கில் பங்கேற்காது. 2 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மொத்தம் 221 கல்லூரிகள் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளன.

பி.டெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங் (சைபர் பாதுகாப்பு), பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீரிங் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரகற்றல்), பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பிசினஸ்சிஸ்டம், பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங் (இண்டர்நெட் ஆப் திங்ஸ்), பி.டெக் வேளாண் என்ஜினீயரிங், பி.இ. பயோமெடிக்கல் என்ஜினீயரிங், பி.டெக் தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களை 201 கல்லூரிகள் திரும்ப பெற்றன.

Tags:    

Similar News