தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியை எம்.ஜி.ஆர்-ஆக மாற்றிய அதிமுக நிர்வாகிகள்

Update: 2023-03-28 09:12 GMT
  • எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பயோவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என மாற்றம் செய்துள்ளார்.
  • எடப்பாடி பழனிசாமி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை :

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்தும், நினைவு பரிசும் வழங்கினர்.

அப்போது, கட்சி நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர் பாணியில் தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பயோவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என மாற்றம் செய்துள்ளார்.

முன்னதாக, பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Full View

Tags:    

Similar News