தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்

Published On 2023-08-13 20:40 IST   |   Update On 2023-08-13 20:40:00 IST
  • ராட்சத "ஆக்டோபஸ்" பட்டம் சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
  • 100க்கும் மேற்பட்ட பட்டம் விடும் கலைஞர்கள் மாமல்லபுரம் வந்துள்ளனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், குளோபல் மீடியா பாக்ஸ் தனியார் நிறுவனமும் இணைத்து நடத்தும், சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

வரும் 15ம் தேதிவரை இத்திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம், குஜராத், ஒரிசா, பஞ்சாப், கோவா மாநிலங்கள் என 100க்கும் மேற்பட்ட பட்டம் விடும் கலைஞர்கள் மாமல்லபுரம் வந்துள்ளனர்.

கடல்குதிரை, கார்ட்டூன், தேசியகொடி, திமிங்கலம், டிராகன், சூப்பர் மேன், கரடி, சுறா மீன்கள், கிருஸ்மஸ் தாத்தா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பட்டங்களை வானில் பறக்க விட்டனர். இதில் ராட்சத "ஆக்டோபஸ்" பட்டம் சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், மாமல்லபுரம் விசுவநாதன், மல்லை சத்யா, பையணூர் சேகர், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Similar News