தமிழ்நாடு செய்திகள்

தருமபுரி அருகே அரசு பள்ளியில் மேசை, நாற்காலியை அடித்து உடைத்த மாணவர்கள்

Published On 2023-03-08 12:43 IST   |   Update On 2023-03-08 15:50:00 IST
  • மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
  • எங்களது பிள்ளைகள் இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறோம்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்தது. பின்னர் அந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

உடனே சத்தம் கேட்டு தலைமை ஆசிரியர் முத்துசாமி வந்து பார்வையிட்டார். அங்கு மாணவர்கள் மேசை, நாற்காலிகளை உடைத்து கொண்டிருந்தனர். உடனே தலைமை ஆசிரியர் மாணவர்களை சத்தம் போட்டு கண்டித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

அங்கு பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி வகுப்பறையையும் தலைமை ஆசிரியர் காட்டினார். இதனை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். பின்னர் எங்களது பிள்ளைகள் இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறோம்.

இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறினார். நடந்த இந்த சம்பத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி பெற்றோர்கள் எழுதி கொடுத்தனர். இதனால் மாணவர்களிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர்.

இதையடுத்து பள்ளி வகுப்பறையில் மேசை, நாற்காலி போன்ற பொருட்களை உடைக்கும் சம்பவத்தை ஒரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வரைலாக பரவி வருகிறது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி கூறுகையில் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையில் மேசை, நாற்காலிகளை அடித்து உடைத்து நொறுக்கி யுள்ளனர்.

இதனால் அவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களை எச்சரித்து எழுதி வாங்கியுள்ளோம். மேலும் இது சம்மந்தமாக முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். அவர் இந்த சம்பவத்தை விசாரித்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். 

Tags:    

Similar News