தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு என்.ஆர்.தனபாலன் கடிதம்

Published On 2023-03-22 07:54 GMT   |   Update On 2023-03-22 08:46 GMT
  • காமராஜரின் உருவ படத்தை விமான நிலைய வளாகத்தில் வைத்திருப்பதை கண்டு காமராஜரின் தொண்டர்கள் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
  • தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான காமராஜரின் தொண்டர்கள் தங்களை போற்றி வணங்குவார்கள்.

சென்னை:

பிரதமர் மோடிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

சென்னை விமான நிலையம் விரிவாக்கம் பணிகள் முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாகிய பிறகு, எங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று மீண்டும் விமானங்களில் சென்னை காமராஜர் விமான நிலையம் வந்தடைந்துள்ளோம் என்கிற முறையான அறிவிப்பு வெளியிட்டு வருவதும், மீண்டும் காமராஜரின் உருவ படத்தை விமான நிலைய வளாகத்திற்குள் வைத்திருப்பதையும் கண்டு காமராஜரின் தொண்டர்கள் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

அதே போன்று சென்னையில் சுமார் ரூ.2,400 கோடியில் புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட விமான நிலையத்தை வருகிற 27-ந்தேதி அன்று தங்களின் திருக்கரங்களால் திறந்த வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நல்ல வேளையில் பெருந்தலைவர் காமராஜரின் உருவ சிலை நிறுவப்படும் என்கிற அறிவிப்பை தாங்கள் வெளியிட்டால் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான காமராஜரின் தொண்டர்கள் தங்களை போற்றி வணங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News