தமிழ்நாடு

மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்த ஸ்மார்ட் மீட்டர்

Published On 2023-03-20 08:37 GMT   |   Update On 2023-03-20 08:37 GMT
  • பகிர்மானக் கழகத்தின் இழப்பு 2021-22-ம் ஆண்டில் ரூ.11,955 கோடியில் இருந்து நடப்பாண்டில் ரூ.7,825 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக ரூ.14,063 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு:-

மின் பயன்பாட்டுத் தரவுகளை தானியங்கி முறையில் பெறுவதற்கு, முழு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மானத் திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோர் இணைப்புகளுக்கும் முன் கூட்டியே கட்டணம் செலுத்தும் வசதியுடன் திறன்மிகு மின் அளவிகள் (ஸ்மார்ட் மீட்டர்) நிறுவப்படும்.

அரசால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைச் சீர்திருத்தங்களின் விளைவாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை சற்று மேம்பட்டுள்ளது. இதனால் இக்கழகத்தின் இழப்பு 2021-22-ம் ஆண்டில் ரூ.11,955 கோடியில் இருந்து நடப்பாண்டில் ரூ.7,825 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.

இந்த வரவு-செலவு திட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக ரூ.14,063 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News