தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட வேண்டும்: செங்கை பத்மநாபன் வலியுறுத்தல்

Published On 2023-08-29 15:51 IST   |   Update On 2023-08-29 15:51:00 IST
  • ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பை முக்கிய கொள்கையாக கொண்டுள்ளார்.
  • பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வடமாநில மக்கள் ஆதரவோடு கணிசமான எம்.பி.க்களை கொண்டு மத்தியில் ஆட்சி அமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம்.

சென்னை:

நமதுரிமை காக்கும் கட்சி பொது செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பை முக்கிய கொள்கையாக கொண்டு பயணித்ததால் முதலில் தலைநகர் டெல்லியையும் பின்னர் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி அமைத்து அக்கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வடமாநில மக்கள் ஆதரவோடு கணிசமான எம்.பி.க்களை கொண்டு மத்தியில் ஆட்சி அமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News