தமிழ்நாடு செய்திகள்

சனாதனம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

Published On 2023-09-07 08:41 IST   |   Update On 2023-09-07 08:41:00 IST
  • சனாதனம் விவகாரத்தில் இந்தியா முழுவதும் பா.ஜ.க.வினர் புகார் அளித்து வருவது குறித்து தொலைக்காட்சியில் தான் பார்த்துகொண்டு இருக்கிறேன்.
  • ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்காதது தான் சனாதனத்துக்கான உதாரணம்.

சென்னை:

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சனாதனம் விவகாரத்தில் இந்தியா முழுவதும் பா.ஜ.க.வினர் புகார் அளித்து வருவது குறித்து தொலைக்காட்சியில் தான் பார்த்துகொண்டு இருக்கிறேன். 'பாரத்' என பெயரை மாற்றி விட்டார்களா? சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என 100 ஆண்டுகளாக பேசி வருகிறோம். சனாதனத்தை ஒழிக்க நாங்கள் என்ன செய்யாமல் இருக்கிறோம்? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை யார் கொண்டு வந்தார்கள்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்காதது தான் சனாதனத்துக்கான உதாரணம். சனாதனம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News