தமிழ்நாடு

சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம்- மீன், கோழி இறைச்சி விலை குறைந்தது

Published On 2022-11-28 08:28 GMT   |   Update On 2022-11-28 08:28 GMT
  • வஞ்சிரம், வவ்வால், சங்கரா, கானாங்கெழுத்தி, கிழங்கன், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை வழக்கத்தை விட குறைந்து இருந்தது.
  • கோழி இறைச்சி கிலோ சராசரியாக ரூ.260ஆக உள்ளது.

சென்னை:

கார்த்திகை மாதம் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலானோர் விரதம் இருப்பது வழக்கம். இதனால் மீன், இறைச்சி விலை சற்று குறைந்து உள்ளது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், சங்கரா, கானாங்கெழுத்தி, கிழங்கன், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை வழக்கத்தை விட குறைந்து இருந்தது.

கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தற்போது ரூ.100 முதல் ரூ.200 வரை விலை குறைந்து இருந்தது. ரூ.1000-க்கு விற்ற வஞ்சிரம் ரூ.800-க்கு விற்கப்பட்டது.

இதேபோல் கோழி இறைச்சி விலையும் சற்று குறைந்து உள்ளது. கோழி இறைச்சி கிலோ சராசரியாக ரூ.260ஆக உள்ளது. நாட்டுக்கோழி கிலோ ரூ.500க்கு விற்கப்படுகிறது. பண்ணை கோழி கிலோ ரூ.300க்கு விற்பனையானது. ஆனால், ஆட்டு இறைச்சியின் விலை குறையவில்லை. ஒரு கிலோ ரூ.900-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து இறைச்சி வியாபாரிகள் கூறும்போது, 'கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை செல்கிறார்கள். இதனால் இறைச்சி தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக இறைச்சி வியாபாரமும் பாதித்து உள்ளது.

மீன், கோழி இறைச்சியின் விலையை குறைத்து உள்ளோம். ஆனால் ஆட்டு இறைச்சி விலையில் மாற்றம் இல்லை. கார்த்திகை மாதம் முழுவதும் இது நீடிக்கும்' என்றார்.

Tags:    

Similar News