தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

கடலூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு- போலீஸ் உத்தரவு

Published On 2022-09-29 05:04 GMT   |   Update On 2022-09-29 05:04 GMT
  • ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மனு அளித்தனர்.
  • சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு கருதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

கடலூர்:

இந்திய சுதந்திர தினத்தில் 75-வது ஆண்டு விழா, அம்பேத்கார் நூற்றாண்டு விழா, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டில் அனுமதிகோரி இருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மனு அளித்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவும் பரிசீலனை செய்யப்படும் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோரியிருந்த ஊர்வலத்துக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு கருதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து மனு அளித்தவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News