தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.12.30 கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

Update: 2022-09-30 04:13 GMT
  • கொங்கல் நகரம் மாரியம்மன், விநாயகா் கோவிலுக்கு சொந்தமான 21.10 ஏக்கா் நிலமும் தனிநபா்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
  • மீட்கப்பட்ட நிலங்களில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன.

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம் சிந்திலுப்பு வெங்கடேசப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 20.78 ஏக்கா் நிலம் தனிநபா்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. அதேபோல கொங்கல் நகரம் மாரியம்மன், விநாயகா் கோவிலுக்கு சொந்தமான 21.10 ஏக்கா் நிலமும் தனிநபா்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா், திருப்பூா் மண்டல இணை ஆணையா் குமரதுரை உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட நிலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கோவில் நிலங்களை தாமாக முன்வந்து ஒப்படைப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை திருப்பூா் உதவி ஆணையா் செல்வராஜ், சரக ஆய்வாளர் சுமதி, செயல் அலுவலா்கள் அம்சவேணி மற்றும் கோவில் அலுவலா்கள் முன்னிலையில் நிலங்கள் மீட்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து, மீட்கப்பட்ட நிலங்களில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன. 2 கோவில்களுக்கும் சொந்தமான ரூ.12.30 கோடி மதிப்பிலான 41.88 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News