தமிழ்நாடு

கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்- 10 ஆயிரம் காகித துண்டுகளில் உருவாக்கி ஐடி ஊழியர் அசத்தல்

Published On 2023-06-06 05:36 GMT   |   Update On 2023-06-06 05:36 GMT
  • மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்தநாளுக்காக 100 ரூபாய நாணய மொசைக் ஆர்ட்டை உருவாக்கினேன்.
  • அன்றாட பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போது இந்த மொசைக் ஆர்ட்டை இரு மாதங்களில் செய்து முடித்தேன்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் லுாகாஸ் (33). இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.

திருக்குறள் மற்றும் தமிழ் மீது பற்றுள்ள இவர், ஏற்கனவே ஐஸ் குச்சிகளில் தனித்தனியாக 1,330 திருக்குறள்களை எழுதியும், வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு 5000 காகித துண்டுகளால் அவரது உருவத்தை வரைந்தும் சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, 10 ஆயிரம் காகித துண்டுகள் மூலம் 100 ரூபாய் நாணயத்தில் கருணாநிதி உருவம் இடம் பெற்றுள்ளது போல் மொசைக் ஆர்ட்டை லூகாஸ் உருவாக்கி உள்ளார்.

இந்த மொசைக் ஆர்ட்டில் கீழ் பகுதியில் கருணாநிதி கூறிய இமயமலைக்கு பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன் என்ற வரிகளை எழுதி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து லூகாஸ் கூறுகையில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்தநாளுக்காக 100 ரூபாய நாணய மொசைக் ஆர்ட்டை உருவாக்கினேன்.

இதற்கு, 10 ஆயிரம் பேப்பர் துண்டுகள் தேவைப்பட்டன. எனது அன்றாட பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போது இந்த மொசைக் ஆர்ட்டை இரு மாதங்களில் செய்து முடித்தேன். இன்னும் பல சாதனைகளை படைப்பேன் என கூறினார்.

Tags:    

Similar News