தமிழ்நாடு

ஈபிஎஸ் எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும்- சபாநாயகருக்கு ரவீந்திரநாத் எம்.பி. கடிதம்

Published On 2022-07-22 10:29 GMT   |   Update On 2022-07-22 10:29 GMT
  • ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
  • எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என ரவீந்திரநாத் கடிதம்

சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி. இருந்து நீக்கப்பட்டார். அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது என கூறி உள்ளார்.

இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்கக்கோரி, ரவீந்திரநாத் எம்.பி., மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும், ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாகவும் ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News