தமிழ்நாடு

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜி.கே.மணிக்கு அறுவை சிகிச்சை: ராமதாஸ் நேரில் பார்த்தார்

Published On 2023-08-26 08:30 GMT   |   Update On 2023-08-26 08:30 GMT
  • ஜி.கே.மணி தொண்டை வலியால் பேச முடியாமலும், தொடர் தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார்.
  • ஆபரேசனுக்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஜி.கே.மணியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை:

பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தார்.

தொண்டை வலியால் பேச முடியாமலும், தொடர் தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் தொண்டை குரல்வளையில் ஏற்பட்டிருக்கும் கட்டியை அகற்ற வேண்டும் என்றனர். இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு அவருக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆபரேசனுக்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஜி.கே.மணியை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அறுவை மருத்துவம் செய்யவிருக்கும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாபு மனோகரிடம் ஜி.கே.மணிக்கு மேற்கொள்ளப்பட விருக்கும் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார். நல்லமுறையில் கவனித்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.

ஆபரேசன் முடிய மாலை 3 மணி வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு மாலையில் வருவதாக கூறி சென்றார்.

Tags:    

Similar News