தமிழ்நாடு

உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை

Published On 2023-07-27 05:45 GMT   |   Update On 2023-07-27 05:45 GMT
  • பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
  • 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

வந்தவாசி:

மத்திய பிரதேச மாநிலத்தில் கங்காப்பூர் என்ற இடத்தில் கோலோ கோதாம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடவும் இது போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்க கூடாது என்ற நோக்கத்திலும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தப்படி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி அவர்களுடைய பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

சீடர்கள் 3 பேரும் சாலையில் தெர்மாகோல் சீட் மீது படுத்து ஊர்ந்த படி ராமேஸ்வரம் நோக்கி பாதரையாத்திரையாக செல்கின்றனர்.

இவர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உலக நன்மைக்காகவும் கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் பரவக்கூடாது என்ற நோக்கத்திலும் உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

தினமும் 10 கிலோமீட்டர் வரை செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News