தமிழ்நாடு

பழனி கோவில் கருவறையில் நவபாஷாண சிலை- பாதுகாப்புக்குழு ஆய்வு

Published On 2023-01-09 08:10 GMT   |   Update On 2023-01-09 08:10 GMT
  • தமிழக அரசு சார்பில் பழனி முருகன் கோவில் நவபாஷாண பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
  • ஓரிரு நாளில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழனி:

பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் கருவறையில் உள்ள மூலவரான நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலைக்கு மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழச்சிகள் நடைபெறாமல் உள்ளதால் இதுகுறித்து பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வந்தது.

ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பழனி முருகன் கோவில் நவபாஷாண பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது. நீதிஅரசர் பொங்கியப்பன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் இதில் இடம்பெற்றுள்ளனர். எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஸ்தபதி உள்பட 11 பேர் கொண்ட குழு ஆலோசனைக்கூட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பாதுகாப்புக்குழு நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணிநேர ஆய்வுக்கு பிறகு குழுவின் ஆலோசனைக் கூட்டம் மலைக்கோவிலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஓரிரு நாளில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News