தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரத்தில் தேசிய மீன் விவசாயிகள் தின மாநாடு: மத்திய அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

Published On 2023-07-10 18:54 IST   |   Update On 2023-07-10 18:54:00 IST
  • பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீன்வளம் சார்ந்த பொருட்கள் கொண்ட கண்காட்சி அரங்குகள் உள்ளன.
  • மீன்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த செயலர்கள், இயக்குனர்கள் வந்திருந்தனர்.

மாமல்லபுரம்:

தேசிய மீன் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இரண்டு நாள் சந்திப்பு மாநாட்டை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர்கள் டாக்டர் எல்.முருகன், சஞ்சீவ் குமார் பல்யான் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

முன்னதாக அங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீன்வளம் சார்ந்த பொருட்கள், மிஷினரி, ஏற்றுமதி வழிகாட்டுதல், புதிய தொழில் நுட்பம், பண்ணை இயந்திரம், மீன்வகை தொழில்கள், மதிப்பு கூட்டு தொழில், உள்ளிட்ட மீன்வகை தொழில் சார்பு கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவா, அந்தமான், ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், சிக்கிம், நாகலாந்த், நேபாளம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த செயலர்கள், இயக்குனர்கள் வந்திருந்தனர்.

ஒவ்வொரு மாநில மீன் விவசாயிகளிடமும் ஆன்-லைன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அவர்களுக்கு அந்தந்த மாநில அமைச்சர்கள் உடனடியாக பதிலளித்தனர். புதிதாக மீன் பிடிப்பதற்கான தொழில்நுட்ப தொழில் துவங்கிய ஸ்டாட்டப் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News