தமிழ்நாடு

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் சேவை கட்டணம் உயருகிறது: வடைமாலை ரூ.1,500 ஆக அதிகரிக்கிறது

Published On 2023-12-25 08:10 GMT   |   Update On 2023-12-25 08:10 GMT
  • ஆஞ்சநேயர் கோவில் வடைமாலை தரிசனத்துக்கும் சிறப்பு பெற்றது.
  • வருகிற 1-ந்தேதி முதல் சேவை கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை:

சென்னை நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் 32 அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் வடைமாலை தரிசனத்துக்கும் சிறப்பு பெற்றது. இதற்கு சேவை கட்டணங்கள் உள்ளன.

இந்நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் சேவை கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பூர்ண வடை மாலைக்கான சேவைக்கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆகவும், சிறிய வடை மாலைக்கான சேவைக்கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.800 ஆகவும், தீப நெய் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை பக்தர்கள் வருகிற 28-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News