தமிழ்நாடு

காலை உணவு திட்டம் குறித்து அவதூறு: பெண் அதிகாரி பணியிடை நீக்கம்

Published On 2023-09-23 03:02 GMT   |   Update On 2023-09-23 03:02 GMT
  • காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா பரப்பி உள்ளார்.
  • மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்தில் சில பள்ளிகளில் காலை உணவு திட்டம் தயாரிக்க சில உணவு பொருட்களின் இருப்பு இல்லை என்றும், அந்த உணவு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் உபயமாக (ஸ்பான்சர்) பெற்று உணவு தயாரிக்குமாறும், வேறு வழியில்லை என்றும், கலெக்டரே இந்த உத்தரவை போட்டிருப்பதாகவும், உணவு தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் வாட்ஸ் அப் குழுவில் குரல் பதிவு செய்து அனுப்பிய ஆடியோ வைரலானது. ஆனால் இது தவறான தகவல் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் மறுப்பு தெரிவித்தார்.

இந்தநிலையில், காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை பரப்பியதாக வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்) மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News