தமிழ்நாடு செய்திகள்

காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த மோடி- எதிர்பாராத நிகழ்வால் திக்குமுக்காடிய பா.ஜ.க.வினர்

Published On 2023-04-09 15:17 IST   |   Update On 2023-04-09 15:17:00 IST
  • பொதுமக்கள் அருகில் நடந்து சென்று பிரதமர் மோடி அவர்களை பார்த்து கையசைத்தார்.
  • பிரதமர் மோடி காரை விட்டு இறங்குவார் என்பதை சற்றும் எதிர்பாராத பொதுமக்களும், பாரதிய ஜனதாவினரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

ஊட்டி:

பிரதமர் மோடி இன்று முதுமலை யானைகள் முகாமுக்கு வந்தார். பின்னர் அவர் மசினகுடிக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டுச் சென்றார்.

இதையறிந்த பழங்குடியின மக்கள் ஏராளமானோர் மசினகுடி சந்திப்பில் திரண்டு நின்றனர். அவர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து, பாரம்பரிய இசையை இசைத்தபடி பிரதமர் மோடியை வரவேற்றனர். மேலும் ஏராளமான பாரதிய ஜனதாவினரும் அங்கு திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் காரில் சென்ற மோடி காரை நிறுத்தும்படி கூறினார். பின்னர் பொதுமக்கள் அருகில் நடந்து சென்று அவர்களை பார்த்து கையசைத்தார். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சுமார் 2 நிமிடங்கள் அங்கு நின்ற பிரதமர் மோடி அதன்பின் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி காரை விட்டு இறங்குவார் என்பதை சற்றும் எதிர்பாராத பொதுமக்களும், பாரதிய ஜனதாவினரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். அவர்கள் பிரதமர் மோடி வாழ்க என கோஷமிட்டனர். பிரதமரின் இந்த அணுகுமுறை அனைவரையும் கவர்ந்தது.

Tags:    

Similar News