தமிழ்நாடு செய்திகள்

மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை.

மோடி பிறந்தநாளை முன்னிட்டு 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: அண்ணாமலை நடத்தி வைத்தார்

Published On 2023-09-17 11:04 IST   |   Update On 2023-09-17 11:04:00 IST
  • தாலியை எடுத்துக்கொடுத்து மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை அண்ணாமலை வாழ்த்தினார்.
  • விழாவில் திருமணம் செய்துகொண்ட 73 ஜோடிகளுக்கும் 73 விதமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவை:

பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் தாமரை திருமண விழா என்ற பெயரில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த விழாவில் தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 73 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். தாலியை எடுத்துக்கொடுத்து மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை வாழ்த்தினார்.

விழாவில் திருமணம் செய்துகொண்ட 73 ஜோடிகளுக்கும் 73 விதமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தலா ஒரு நாட்டு மாடு மற்றும் கிரைண்டர், மிக்சி, பீரோ, கட்டில், மெத்தை, குத்துவிளக்கு, பூ, பழம், காய்கறிகள், பாய், வீட்டு பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. அவற்றை புதுமண தம்பதிகளுக்கு அண்ணாமலை வழங்கினார்.

Tags:    

Similar News