தமிழ்நாடு செய்திகள்

ஹேமந்த் சோரன் கைது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2024-02-01 15:23 IST   |   Update On 2024-02-01 15:23:00 IST
  • ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நேற்று கைது செய்யப்பட்டார்.
  • ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை:

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பா.ஜ.க.வின் தந்திரங்களால் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கமுடியாது. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது கீழ்த்தரமான செயல்.

இந்தச் செயல் பா.ஜ.க.வின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தூண்டுகிறது. பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியலுக்கு ஹேமந்த் சோரன் அடிபணியாமல் உறுதியாக இருக்கிறார். பா.ஜ.கவின் மிரட்டல்களை எதிர்த்துப் போராடும் ஹேமந்த் சோரனின் உறுதிப்பாடு உத்வேகம் தருகிறது என பதிவிட்டிருந்தார்.

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News