தமிழ்நாடு செய்திகள்

துணிச்சலாக பெண் செய்யும் பணியை விமர்சிக்க கூடாது- அமைச்சர் சேகர்பாபு கண்டனம்

Published On 2022-12-13 08:52 IST   |   Update On 2022-12-13 12:09:00 IST
  • மேயர் பாதுகாப்பு வாகனத்தில் பயணித்தது என்பது முதலமைச்சரோடு அந்தந்த பகுதிகளுக்கு சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற துடிப்போடு நடந்த செயலாகும்.
  • ஆணுக்கு நிகராக ஒரு பெண்மணி இப்படிப்பட்ட துணிச்சலோடு செய்கின்ற பணிகளை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சிப்பது தேவையற்ற ஒன்றாகும்.

சென்னை:

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட சென்றபோது, சென்னை மாநகராட்சி மேயர் பாதுகாப்பு வாகனத்தில் பயணித்தது என்பது முதலமைச்சரோடு அந்தந்த பகுதிகளுக்கு சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற துடிப்போடு நடந்த செயலாகும்.

பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில் ஆணுக்கு நிகராக ஒரு பெண்மணி இப்படிப்பட்ட துணிச்சலோடு செய்கின்ற பணிகளை பாராட்ட வேண்டுமே தவிர அதை விமர்சிப்பது தேவையற்ற ஒன்றாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News