தமிழ்நாடு

அடுக்குமாடிகளில் வசிப்பவர்களுக்கு உணவுகள் வினியோகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

Published On 2023-12-05 05:54 GMT   |   Update On 2023-12-05 05:54 GMT
  • புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
  • சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

சென்னை:

சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் உணவு வழங்கினார்.

அடையார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சைதாப்பேட்டை பாலம் அருகே உள்ள சிறிய சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அந்த பகுதிகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

சுப்பிரமணிய சாலை, திருவள்ளுவர் சாலை, ஜாபர்கான்பேட்டை, ஆட்டுதொட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்.

தண்ணீரால் சூழப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்தார்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், முக்கிய சாலைகளில் மழை நீர் வடிந்து போக்குவரத்து சகஜமாகி விட்டதாகவும், ஆற்றங்கரையோரம் உள்ள தெருக்களில் மழை நீர் மெல்ல வடிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News