தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை

Published On 2023-12-04 09:21 GMT   |   Update On 2023-12-04 09:21 GMT
  • மிச்சாங் புயலால் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை.
  • நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதப்பதால் நாளை சகஜ நிலை திரும்புவது கடினம்.

மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்னும் மழையும், காற்றும் ஓய்ந்தபாடில்லை.

இதனால் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. இன்று இரவு வரை மழையும், காற்றும் நீடிக்கும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.

இரவுக்குப்பின் மழை ஓய்ந்தாலும் தண்ணீர் வடிந்து நாளை உடனடியாக சகஜ நிலை திரும்ப வாய்ப்பில்லை. இதனால் நாளையும் நான்கு மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக விடுமுறை அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News