தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு- 3 ஆயிரம் பேர் குவிந்தனர்

Published On 2023-07-27 08:02 GMT   |   Update On 2023-07-27 08:02 GMT
  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ பொது கலந்தாய்வு கடந்த 24-ந் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கி நடந்து வருகிறது.
  • கட்-ஆப் மார்க் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.)யை தேர்வு செய்தனர்.

சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ பொது கலந்தாய்வு கடந்த 24-ந் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை கிண்டியில் இன்று நேரடியாக நடந்தது.

முதலில் விளையாட்டு வீரர்கள் 7 இடங்கள் முன்னாள் ராணுவத்தினர் 11 இடங்கள், மாற்றுத் திறனாளிகள் 223 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதனை தொடர்ந்து அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடந்தது. 606 மருத்துவ இடங்களுக்கு 2,993 பேர் அழைக்கப்பட்டனர். கட்-ஆப் மார்க் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.)யை தேர்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து ஸ்டான்லி, கே.எம்.சி., கோவை, சேலம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்தனர். முதல் இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலையில் கல்லூரியில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்குகிறார்.

Tags:    

Similar News