தமிழ்நாடு செய்திகள்
கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் மாயம்
- கள்ளக்குறிச்சி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
கள்ளகுறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.
சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், பலர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை அவர் திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார்.
ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை பல இடங்களில் தேடினர் ஆனால் எங்கும் அவர் இல்லை. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.