தமிழ்நாடு செய்திகள்

மருது சகோதரர்கள் நினைவு தினம்: திருப்பத்தூரில் 24-ந்தேதி ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை

Published On 2023-10-21 14:02 IST   |   Update On 2023-10-21 14:02:00 IST
  • மருது சகோதரர்களின் 222-வது நினைவுதினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படும்.
  • சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்று போராடி வீர மரணம் அடைந்த மருது சகோதரர்களின் 222-வது நினைவுதினத்தையொட்டி 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படும்.

நிர்வாகிகள், மருது அழகுராஜா, அசோகன், தர்மர் எம்.பி., கோபி கிருஷ்ணன், ஐயப்பன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News