தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 4 பேருக்கு ஜேஎன்-1 வைரஸ் உறுதி

Published On 2023-12-25 15:07 IST   |   Update On 2023-12-25 15:07:00 IST
  • இந்தியாவில் புதிதாக பரவும் ஜேஎன்1 வகை கொரோனாவால் 63 பேர் பாதிப்பு.
  • அதிகபட்சமாக கோவாவில் 34 பேர் பாதிப்பு.

இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் புதிதாக பரவும் ஜேஎன்1 வகை கொரோனாவால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவாவில் 34 பேரும், மகாராஷ்டிராவில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜேஎன்1 வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 8 பேரும், கேரளாவில் 6 பேரும், தெலங்கானாவில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News