தமிழ்நாடு செய்திகள்
கே.கே. நகரில் தொழிலாளி வீட்டில் பணம்- 20 பவுன் நகை கொள்ளை
- முனுசாமி அமைந்தகரையில் உள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
- முனுசாமி தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது நகை, பணம் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
போரூர்:
சென்னை, கே.கே. நகர், கிழக்கு வன்னியர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி அமைந்தகரையில் உள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சோளிங்கரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர். நேற்று மாலை முனுசாமி தனது வீட்டுக்கு திரும்பி வந்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து முனுசாமி கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.