தமிழ்நாடு செய்திகள்

கோவையில் 6-வது நாளாக தொடரும் வேட்டை: தி.மு.க. பெண் பிரமுகர் வீடு உள்பட 2 இடங்களில் சோதனை நீடிப்பு

Published On 2023-11-08 10:23 IST   |   Update On 2023-11-08 10:23:00 IST
  • 2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
  • கோவையில் 6 இடங்களில் நடந்த சோதனையில் 4 இடங்களில் சோதனை நிறைவு பெற்று விட்டது.

கோவை:

அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3-ந் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வரும் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு பேரவை துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் வீட்டிலும், கோவை சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

இதபோல் சிங்காநல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம், கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமாரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

இதில் 2 இடங்களில் சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது. மற்ற இடங்களில் 4 நாட்களை கடந்தும் சோதனை நடந்தது. நேற்று மீனா ஜெயக்குமார் வீடு உள்பட 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இன்று 6-வது நாளாக கோவையில் சோதனை நடைபெற்று வருகிறது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மீனா ஜெயக்குமாரின் வீடு மற்றும், சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் அலுவலகத்தில் இந்த சோதனையானது நடக்கிறது.

2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே அங்கு பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து மேலும் சில ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் 6 இடங்களில் நடந்த சோதனையில் 4 இடங்களில் சோதனை நிறைவு பெற்று விட்டது. இந்த 4 இடங்களில் இருந்தும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News