தமிழ்நாடு செய்திகள்

(கோப்பு படம்)

கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?- அண்ணாமலை சவால்

Published On 2023-01-01 01:52 IST   |   Update On 2023-01-01 01:52:00 IST
  • கடந்த காலங்களில் தமிழக பாஜக தனித்துப் போட்டியிட்டதுண்டு.
  • இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது.

தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாக. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே.

யதார்த்தத்தை எதிர் கொள்ளுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. பிரதமர் மோடி தலைமையில் 2024ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக மாபெரும் வெற்றியை பெறும்.

கடந்த காலங்களில் தமிழக பாஜக தனித்துப் போட்டியிட்டதுண்டு.இனி வரும் காலங்களில் அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News