தமிழ்நாடு செய்திகள்

கவர்னர் மாளிகை தர்பார் அரங்கிற்கு பாரதியார் பெயர்- ஜனாதிபதி கல்வெட்டை திறந்து வைக்கிறார்

Published On 2023-08-02 08:51 IST   |   Update On 2023-08-02 08:51:00 IST
  • சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 6-ந்தேதி நடக்க இருக்கிறது.
  • பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

சென்னை:

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

முன்னதாக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்குள்ள தர்பார் அரங்கத்தின் பெயரை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம் என்று பெயர் மாற்றம் செய்து, அதற்கான கல்வெட்டையும் திறந்து வைக்க இருக்கிறார்.

Tags:    

Similar News