தமிழ்நாடு

நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்- ஏப்.10 வரை புகார் அளிக்க அனுமதி

Update: 2023-03-30 12:24 GMT
  • பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்து எழுத்துப்பூர்வமாக புகாரை தெரிவிக்கலாம்.
  • பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் வரும் எப்ரல் மாதம் 10ம் தேதி வரை புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்து எழுத்துப்பூர்வமாக புகாரை தெரிவிக்கலாம் எனவும் விசாரணை அதிகாரி முகமது சபீர் ஆலம் அறிவித்துள்ளார்.

மேலும் அவர், ஏப்ரல் 10ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை புகார்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் 4ம் நாளான இன்று மேலும் ஒருவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News