தமிழ்நாடு செய்திகள்

2 மணிநேரத்தில் ஏ.டி.எம்.மில் கைவரிசை- ஐ.ஜி. கண்ணன் பேட்டி

Published On 2023-02-13 13:32 IST   |   Update On 2023-02-13 13:32:00 IST
  • திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் கைதேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளனர்.
  • 9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏ.டி.எம். கொள்ளையில் துப்பு துலங்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்.

கைதேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டுள்ளனர். 4 ஏ.டி.எம்.களையும் சேர்த்து 2 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தை திருட்டு கும்பல் அரங்கேற்றியுள்ளது.

குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம்.களை தெரிந்து கொண்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அறிவியல் ரீதியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை பிடிக்க விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை நடந்த ஏ.டி.எம்.களின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மும்பையில் பெறப்பட்டுள்ளது. அவற்றை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News