குடும்ப தகராறில் தலை துண்டித்து பெண் படுகொலை- கணவன் வெறிச்செயல்
- பவித்ரா ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
- இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2-வது மனைவி ஆவார். அதுபோல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
பவித்ரா அவரது தாயாருடன் அடிக்கடி பேசி வருவது பிடிக்காமல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் திடீரென வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை துண்டித்து படுகொலை செய்தார்.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.