தமிழ்நாடு

உண்டியல் உடைக்கப்பட்டு இருந்த காட்சி.

கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் கொள்ளை- மர்ம நபர்கள் கைவரிசை

Published On 2023-01-06 07:45 GMT   |   Update On 2023-01-06 07:45 GMT
  • சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது.
  • கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை என்று தலைவர் எப்ரேன் ரவி கூறினார்.

என்.ஜி.ஓ.காலனி:

சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து தினமும் பிரார்த்தனைகள் நடந்தது. இன்று காலையில் ஆலயத்தின் மின் விளக்கை அணைப்பதற்காக தலைவர் எப்ரின் ரவி சென்றார். அப்போது ஆலயத்தின் முன்பிருந்த அந்தோணியார் கெபி அருகில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் ஆலயத்தின் கதவும் உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தின் உள்ளே இருந்த மரப்பெட்டி உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து எப்ரின் ரவி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை என்றும் இதனால் உண்டியலில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்ததாகவும் தலைவர் எப்ரேன் ரவி கூறினார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News