தமிழ்நாடு செய்திகள்
ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை நடத்த டி.ஜி.பி. வழிகாட்டுதல்படி அனுமதியுங்கள்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி ஆடல்-பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
- கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளார்.
மதுரை:
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி ஆடல்-பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில், கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளார்.
எனவே அந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுதாரர்களின் மனுக்களை பரிசீலனை செய்து, சட்டத்திற்கு உட்பட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, மனுக்களை முடித்து வைத்தார்.