தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- கவுதமன் கோரிக்கை

Published On 2024-06-21 12:53 IST   |   Update On 2024-06-21 12:53:00 IST
  • கயவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்.
  • கள்ளச்சாராயம் விற்கின்ற கயவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்.

சென்னை:

தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் டைரக்டர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 13 உயிர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் 8 உயிர்களும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி உயிர்விட்ட ஓராண்டிற்குள் தற்போது கள்ளக்குறிச்சியில் 40-க்கும் மேற்பட்ட உயிர்கள் செத்து, 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற செய்தி இதயத்தில் ஈரம் உள்ளவர்களை நடுநடுங்கச் செய்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்கின்ற கயவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்.

50-க்கும் மேற்பட்ட பலியான உயிர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு உடனடியாக பூரண மதுவிலக்கு கொள்கையை பிரகடனப்படுத்த வேண்டும்.

Similar News