தமிழ்நாடு செய்திகள்

மருதூரில் வள்ளலார் அவதரித்த இல்லத்தில் கவர்னர் ஆர்.என். ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் பள்ளி மாணவிகளை வாழ்த்திய காட்சி.

சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்- வடலூர் ஜெயந்தி விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம்

Published On 2023-06-22 15:30 IST   |   Update On 2023-06-22 15:30:00 IST
  • 200 ஆண்டுகளுக்கு முன் இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார்.
  • இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது.

வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.

உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் ரிஷிகள், மகான்களின் பல நூல்களை படித்தவன். அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்த போது மிகவும் மிரமிப்பை எற்படுத்தியது.

10 ஆயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். காழ்ப்புணர்ச்சி மற்றும் அறியாமை காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அடிப்படை உரிமை என்பது ஒரு பரமேஸ்வரன். அவன் படைத்த மனிதன், விலங்குகள், செடி கொடிகள் என அனைத்தும் ஒரு குடும்பமே.

இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களின் உடை, தோற்றம் என வெவ்வேறாக உள்ளது. உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்.சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலாரின் வரிகள், சனாதன தர்மத்தின் எதிரொலியாகும்.

200 ஆண்டுகளுக்கு முன் இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலின்போது தோன்றியவர் அவர்.

நாட்டில் ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்தபோதும், புதிதாக வெளி நாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது.

இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் ஒருவரும் சண்டையிட்டு கொண்டதில்லை.

ஆன்மீகத்தில் உயர்ந்த நாடு நமது நாடு. நாட்டில் பிரதமர் பேசுவதை உலக தலைவர்கள் கவனித்து கொண்டுள்ளனர். இந்தியா வல்லரசாகி உலகத்ததின் தலைமையை ஏற்கும்.

இந்தியா வளர்ச்சி பாதையில் செல்லும்போது யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் கொள்கையை ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக புவனகிரி அடுத்துள்ள மருதூரில் வள்ளலார் அவதரித்த இல்லத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமி ரவியுடன் தரிசனம் செய்தார்.

Tags:    

Similar News