தமிழ்நாடு செய்திகள்
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1000 குறைந்தது
- கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது.
- ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1000 குறைந்தது.
சென்னை:
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. நேற்று கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5975-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.47,800-க்கும் விற்பனையானது. இது புதிய உச்சமாக அமைந்தது.
இந்த நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1000 குறைந்தது. கிராமுக்கு ரூ.125 குறைந்தது. இன்று காலை கிராம் ரூ.5850 ஆகவும், பவுன் ரூ.46,800 ஆகவும் இருந்தது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 10 காசு குறைந்து 81 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.