தமிழ்நாடு செய்திகள்

படகுகளில் இருந்து மீன்களை கூடைகளில் அள்ளிக்கொண்டு கரையை நோக்கி வந்த மீனவர்கள்

மீன்வரத்து குறைவால் மீனவர்கள் கவலை

Published On 2023-09-19 10:02 IST   |   Update On 2023-09-19 10:02:00 IST
  • மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
  • பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தந்தால் மட்டுமே மீனவர்கள் நஷ்டம் இன்றி மீன்பிடிக்க முடியும்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் இரண்டு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். திங்கட்கிழமை மீன்பிடிக்க செல்ல 412 படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்றனர். ஆனால் 250-க்கும் குறைவான படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது.

காற்றின் வேகம் அதிகளவில் இருந்த நிலையில் மீன்பாடு மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளதாக இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு படகுக்கும் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் மீன் வரத்து குறைந்துள்ளதால் பல ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தந்தால் மட்டுமே மீனவர்கள் நஷ்டம் இன்றி மீன்பிடிக்க முடியும். மீன்பிடித்து விட்டு கரைக்கு வரும் நாட்களில் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி துறைமுகம் இன்று காலை வெறிச்சோடியே காணப்பட்டது.

Tags:    

Similar News