தமிழ்நாடு

கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்வு

Published On 2023-11-24 07:51 GMT   |   Update On 2023-11-24 07:51 GMT
  • ரூ.8 கோடிக்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.
  • முழுநேர பயிற்சி பெறும் 212 மாண வர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக ரூ.8 கோடிக்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுசீந்திரம் கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.

இதே போல் ஒருகால பூஜைத் திட்ட கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன், மகள்களின் மேற்படிப்பிற்கான உயர் கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதன்மூலம் முழுநேர பயிற்சி பெறும் 212 மாண வர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் திருமகள், ஹரிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News