தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து

Published On 2023-06-05 13:39 IST   |   Update On 2023-06-05 13:39:00 IST
  • கண்காணிப்பு படையினர் கேமிரா அறையில் திடீரென தீ பற்றி எரிந்தது.
  • மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு படையினர் கேமிரா அறையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அங்கு கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.

இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும், காஞ்சிபுரம் தீயணைப்பு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற அறைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. மேலும் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகள் அருகில் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News