தமிழ்நாடு செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

குறைந்தபட்ச விலை ரூ.30 நிர்ணயம் செய்ய கோரி தேயிலை செடிகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-02 16:04 IST   |   Update On 2022-08-02 16:04:00 IST
  • கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 7 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது.
  • பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

அரவேணு:

கோத்தகிரி அருகே நாரிகிரி கிராமத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயை நிர்ணயம் செய்ய கோரி நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் சந்திரன், ஊர் நிர்வாகி தங்கராஜ், காமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த தேயிலை செடிகளை கையில் எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 7 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் கூலி, தோட்டங்களை பராமரிக்கவே போதுமானதாக இல்லை.

குடும்ப செலவுக்கு விவசாயிகள் திணறி வருகின்றனர். பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்க வேண்டும். அரசு தேயிலை ஏல மையத்தில் குறைந்தபட்சம் 150-க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டும் என வியாபாரியிடம் வலியுறுத்த வேண்டும்.

விவசாய பயிர்களை அழித்து வரும் காட்டு பன்றிகளை சுட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Tags:    

Similar News