தமிழ்நாடு செய்திகள்

காந்தி

ஈரோடு போக்குவரத்து கழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு

Published On 2022-10-15 09:47 IST   |   Update On 2022-10-15 09:47:00 IST
  • சந்தேகம் அடைந்த போக்குவரத்து கழக ஊழியர் வடிவேல்முருகன் என்பவர் சம்பவத்தன்று மாலை காந்தி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார்.
  • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கழிப்பறை சென்ற நிலையில் அங்கேயே இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ஈரோடு:

கோவை குனியமுத்தூர், பி.கே.புதூர், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் காந்தி (57). இவர் விழுப்புரம் உள்பட சில மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார்.

தற்போது ஈரோடு அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் ஈரோடு அகில்மேடு வீதி, வாசுகி வீதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக காந்தி அலுவ லகத்துக்கு செல்லவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை.

சந்தேகம் அடைந்த போக்குவரத்து கழக ஊழியர் வடிவேல்முருகன் என்பவர் சம்பவத்தன்று மாலை காந்தி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார். அறை உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கும், ஈரோடு அரசு மருத்துவமனை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் காந்தி நிர்வாணமாக அமர்ந்த நிலையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கழிப்பறை சென்ற நிலையில் அங்கேயே இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News