தமிழ்நாடு

மின் கம்பம் முறிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

மதுராந்தகம் அருகே மின்கம்பம் முறிந்து சிறுமி மீது விழுந்தது- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Update: 2022-10-06 08:15 GMT
  • மாணவி கிருத்திகா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
  • கிருத்திகாவின் கை சிதைந்து பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள அவுரி மேடு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மகள் கிருத்திகா (வயது 11). இவர் மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி கிருத்திகா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தெரு ஓரத்தில் நடப்பட்டு இருந்த தெரு விளக்கு மின்கம்பம் திடீரென முறிந்து சிறுமி மீது விழுந்தது.

இதில் கிருத்திகா மின் கம்பத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிருத்திகாவின் கை சிதைந்து பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மிகவும் பழுதடைந்து இருந்த அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தபோது மின்சாரம் பாயாததால் மாணவி அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழுதடைந்து நிற்கும் மின்கம்பங்களை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News