தமிழ்நாடு

எழும்பூர் வணிக வழக்குகள் கோர்ட்டில் மின்பிரதியாக்க பிரிவு தொடக்கம்

Published On 2023-01-04 10:15 GMT   |   Update On 2023-01-04 10:15 GMT
  • புதுவழக்கு ஆவணங்களை மின்பிரதியாக்கத்திற்கு அப்பால் ஏறத்தாழ 3 லட்சம் பக்கங்களாலான மரபு வழக்கு ஆவணங்களை மின்பிரதி மயமாக்கும் செயலில் மின்பிரதிமயமாக்க பிரிவு ஈடுபட்டுள்ளது.
  • கட்டுமான இட வசதியை மிச்சப்படுத்தி, நீதிமன்ற ஆவணச் சேமிப்பை அணுகுவதில் உள்ள பொருள் இடமாற்ற தடைகளை தவிர்த்திடும்.

சென்னை:

சென்னை எழும்பூர் வணிக வழக்குகள் கோர்ட்டில் மின்பிரதியாக்கப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு மின்பிரதியாக்கப் பிரிவின் குழுத் தலைவர் நீதிபதி எம்.சுந்தர், குழுவின் பிற உறுப்பினர்கள் மற்றும் சென்னைக்கான மாவட்டப் பொறுப்பு நீதிபதி ஆகியோர் முன்னிலையில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா இதனை தொடங்கி வைத்தார்.

காகித அடிப்படையிலான வழக்குக் கோப்பிடுதல்களை குறைப்பதன் மூலமாக நீதி நிர்வாக செயல் திட்டங்கள் மிகவும் எளிமையானதாகவும், சுழலியல் ரீதியில் நீட்டிக்கப்பட்டதாகவும் மாற துணைபுரிவது நீதிமன்ற ஆவணங்கள் மின் பிரதியாக்கம் ஆகும்.

நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசாங்கம், வழக்காடிப் பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர் கள் போன்ற அனைத்து வகையான பங்குடையோரின் தேவைகளுக்கும் தீர்வளிக்கும் மகத்தான, புதுவழக்கு ஆவணங்களை மின்பிரதியாக்கத்திற்கு அப்பால் ஏறத்தாழ 3 லட்சம் பக்கங்களாலான மரபு வழக்கு ஆவணங்களை மின்பிரதி மயமாக்கும் செயலில் மின்பிரதிமயமாக்க பிரிவு ஈடுபட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மின்னணுவியல் குழுவினரால் வெளியிடப்பட்ட நிலையான இயக்க முறையின் அடிப்படையில் மின் பிரதிமயமாக்கச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கைகொள்ளப்பட வேண்டிய செயற்படுமுறை வருவிக்கப்பட்டது.

இந்தச் செயல் திட்டத்தின்படி, வெகு சில ஆவணங்களைத் தவிர, இத்தகைய தரவுகளை, இயல்வடிவில் பாதுகாத்திட எந்த தேவையும் இராது என்பதோடு, கட்டுமான இட வசதியை மிச்சப்படுத்தி, நீதிமன்ற ஆவணச் சேமிப்பை அணுகுவதில் உள்ள பொருள் இடமாற்ற தடைகளையும் தவிர்த்திடும். தேடுதல், மீட்பு, சேமிப்பு மற்றும் பேரிடர் கால மீள் உருவாக்கம் போன்றவற்றிற்கும் வசதிகள் உள்ளது.

Tags:    

Similar News