தமிழ்நாடு செய்திகள்
தென்காசியில் பரபரப்பு- பாஜகவினர் சென்ற வாகனங்கள் மீது முட்டை வீசி தாக்குதல்
- இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கு பெற்றார்.
- மர்மநபர்களை கைது செய்யக் கோரி பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று மாலை 4 மணி அளவில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கு பெற்றார். மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
பொதுக்கூட்டம் முடிந்த பிறகு, தொண்டர்கள் அவரவர்களின் வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாஜகவினர் சென்ற வாகனங்கள் மீது முட்டை, தக்காளி, தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மர்மநபர்களை கைது செய்யக் கோரி பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.